புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2019

மெக்சிகோவில் சிக்கிய இலங்கையர்கள்

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் மெக்சிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்கள் இலங்கை, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.நீர், உணவு இல்லாமையினால் இவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லைக்குள் மெக்சிக்கோவின் ஊடாக நுழைவது இவர்களின் நோக்கமாகும்.

இவர்கள் கட்டார், துருக்கி, கொலம்பியா, ஈக்குவாடோர், பனாமா, குவத்தமாலா ஆகிய நாடுகள் ஊடாக மெக்சிக்கோ சென்றடைந்துள்ளார்கள்.லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து படகு மூலம் மெக்சிக்கோ – அமெரிக்க எல்லையை சென்றடைந்துள்ளார்கள் என்று மெக்சிக்கோ பொலிஸார் அறிவித்துள்ளார்கள்.

கனடாவை சென்றடைவது இவர்களின் பிரதான இலக்காகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad