புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஆக., 2019

விபத்தில் 6 பேர் பலி, 52 பேர் காயம்

களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்து வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.