புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2019

சுவிட்சர்லாந்து,லூசர்ன் ஏரியில் மூழ்கி ஈழத்தமிழ்ச் சிறுமி மரணம்!

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிட்வால்டன் மாநிலத்தின் லூசர்ன் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாரா நேரத்தில் சிறுமி தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார்.சிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் தம்னுடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தேடிப்பார்த்த பின்னர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் தேடுதலை மேற்கொண்டபோதும் அது பயனளிக்காத நிலையில் விசேட பயிற்சி பெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் உலங்கு வானூர்தி மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்தில் இருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடனேயே முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் குறித்த சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மீட்கப்பட்ட மற்றுமொரு நபர் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஏரியில் இதுவரையில் எவரும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை எனவும் இதுபோன்ற சம்பவம் இதுவே முதல் தடவை எனவும அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ad

ad