புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றார் ஜெ., :புதுவை சிறைக்கைதிகள்  திருச்சி சிறைக்கு மாற்றம்

புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 கைதிகள் நாளை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக ரவுடிகள் ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் கூலிக்கு கொலை செய்வது என தொடர்ந்து ரவுடிகள் ஈடுபட்டு வருவது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டள்ள ரவுடிகள் வெளியில் உள்ள கூலிப்படையினரை வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.

இதன் அடிப்படையில் சிறையில் உள்ள ரவுடிகள் மற்றும் வெளியில் நடமாடும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் உளவுத்துறை, முதல்வரிடம் அளித்த விசாரணை அறிக்கையில் புதுச்சேரி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளுக்கும் சிறை அலுவலர்களுக்கும் ரகசிய தொடர்பு உள்ளதாகவும் இதனை சமாளிக்க முக்கிய ரவுடிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடர்பு கொண்டு புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய ரவுடிகள் 50 பேரை தமிழக சிறைகளில் அடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

புதுச்சேரி கைதிகளை தமிழக சிறைகளில் அடைக்க அனுமதியளிப்பது தொடர்பாக அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. 

இதனையடுத்து முதற்கட்டமாக புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 ரவுடிகளை போலீசார் பட்டியலிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மதியம் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அடுத்தகட்டமாக நாளை மறுநாள் மேலும் 24 ரவுடிகள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்ட வரப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தனியாக உள்ள தீவிர கண்காணிப்பு கொண்ட ஈ பிளாக்கில் அடைக்கப்படுகின்றனர்.

திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு வரப்படும் புதுச்சேரி கைதிகளும் மற்ற கைதிகளும் சேராத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரி கைதிகளுக்கு செல்போன்கள் வழங்கப்படாத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ad

ad