புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வன்முறையின்றி, சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தாம் விரும்பியபடி தெரிவு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad