புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

ஐரோப்பிய குறுந்தூர ஓட்ட சம்பியனான டெஸான் நெய்மோவாவிற்கு ஆயுட்கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நெய்மோவா பெற்ற அனைத்து பதக்கங்களையும் மீள பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கேரிய மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொத்தன்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய உள்ளக சம்பியன்ஷிப் போட்டிகளில் 60 மீற்றர் தூரத்தை அவர் 7.1 செக்கன்களில் கடந்திருந்தார் எனினும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.

அந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுட் கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொத்தன்பேர்க்கில் நடைபெற்ற ஐரோப்பிய உள்ளக சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தை பெற்ற யுக்ரேனின் மரியா ரெய்மியன் புதிய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad