புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

பிரபாகரன் ஒரு விடுதலை போராட்ட வீரர்! தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு தேவை: விக்னேஸ்வரன்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக கட்சிகள் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்ற நிலையில் விக்னேஸ்வரன் தமது கருத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்.
தாம் மாநாட்டு புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு இதனை செய்ய வேண்டும் என்ற தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக இருக்கும்.
ஏற்கனவே தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள்.
எனவே எதிலும் ஒதுங்கியிருக்காது இணைந்திருக்கும் போது விடயங்களை சாதிக்கமுடியும் என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் இந்த விடயங்களை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தேவை என்று தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை பெறும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் எனினும் இராணுவம் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது .எனினும் வாக்காளர்கள் 90 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறினார்.
போரில் கணவர்மாரை இழந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இன்னும் உரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினையை கோருவதாக வெளியான தகவல் அரசாங்கத்தினால் வீணாக உருவாக்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபாகரன் ஒரு விடுதலை பேராட்ட வீரர். அவரை அரசாங்கமே கொடுமையானவராக கருதுகிறது.
இந்தநிலையில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட கெப்பிட்டிபொல திஸ்ஸவேயின் பெயரில் இலங்கையில் வீதிகளுக்கு பெயரிடப்பட்டமையையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் மக்கள் வாக்களிப்பதை படையினர் தடுக்கலாம்!- விக்னேஸ்வரன் சந்தேகம்
அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டுள்ளதாக கூறும் அபிவிருத்தி என்பது பிரசாரமும் வெறும் சித்திரிப்பும் மட்டுமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பாதை நிர்மாணிப்பு போன்ற அபிவிருத்தி என்று கூறும் நடவடிக்கைகளின் மூலம் வடக்கில் தேர்தல் தொகுதிகளை பாதுகாப்பு தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவயளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூடியளவிலான பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்பது சந்தேகமில்லை. எனினும் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் முயற்சிகளில் இராணுவம் ஈடுபடும் என்ற சந்தேகம் உள்ளது.
தேர்தலில் பெருபான்மை பலத்தை பெறுவதில்லை சிரமங்கள் இல்லை என்றாலும் இராணுவத்துடன் போட்டியிடுவதை சிரமமான காரியமாக உள்ளது.
அரசாங்கத்திற்கு வாக்களிப்பவர்கள் என்று நம்பும் வாக்காளர்களை மட்டும் வாக்களிக்க சந்தர்ப்பத்தை கொடுத்து விட்டு ஏனைய வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கப்படலாம் என்ற நியாயமான சந்தேகம் ஏற்படுகிறது.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அதற்கு தவறான வரைவிலக்கணத்தை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இருக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் மேலும் சிக்கல் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஒரே இலங்கையில் மிகவும் ஜனநாயகமான முறையில் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய நிர்வாக முறை தொடர்பாகவே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் நான் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டையே வெளியிட்டேன். பிரபாகரன் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.
பிரபாகரன் கொடூரமானவராக இருக்கலாம். அதேபோல் இலங்கை அரசாங்கம் கொடூரமானது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதி என்று குறிப்பிட்டால், தேசிய மற்றும் சர்வதேசத்தில் உள்ள சகல சுதந்திர போராட்ட வீரர்களையும் பயங்கரவாதிகள் என்றே கருதவேண்டும்.
கொப்பிட்டிபொல அதிகாரம் என்ற சிங்கள சுதந்திர போராட்ட வீரரை பயங்கரவாதி என்று முத்திரை குத்திய பிரித்தானிய கலானித்துவ ஆட்சியாளர்கள் அவரை கொலை செய்தனர். எனினும் அவரை இலங்கையர்கள் வீரர் என கருதுகின்றனர என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ad

ad