27 ஏப்., 2014


ஜனாதிபதிக்கு பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் பாரியளவில் பொருளாதார பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடலாம் என பொருளியல் நிபுணர்கள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பரிந்துரைகளை அமுல்படுத்துவது இன்னமும் காலம் தாமதிக்கப்பட்டால், முதலீட்டாளர்களின் வருகை வரையறுக்கப்படலாம்.
சில மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இலங்கைக் கிளைகளை மூடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இந்த நேரத்தில் புத்திகூர்மையுடன் தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென பொருளியல் நிபுணர்கள் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.