27 ஏப்., 2014


தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: சென்னை ராணுவ அதிகாரி உயிரிழப்பு: குரோம்பேட்டையில் இறுதி சடங்கு
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சென்னையைச் சேர்ந்த ராணுவ அதிகாரியும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உயிரிழந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர் வரதராஜன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரான வரதராஜன் தனது
மனைவி கீதாவுடன் கிழக்கு தாம்பரம் பேராசிரியர் காலனியில் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் முகுந்த். முகுந்திற்கு சுவேதா, நித்யா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இரு சகோதரிகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. முகுந்தின் சொந்த ஊர் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு கிராமம்.

முகுந்திற்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்து என்ற மனைவி உள்ளார். இவர்களுக்க 3 வயதில் அர்ஷிதா என்ற மகள் உள்ளார். 
மேஜர் முகுந்தின் உடல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. திங்கள்கிழமை அவரது உடல் ராணுவ மரியாதையுடன் குரோம்பேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.