புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014


2014 - 2017 வரையுள்ள நான்கு ஆண்டுகளும் இலங்கையை கண்காணிக்கும் ஆண்டுகள்!- நவநீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சமர்ப்பித்துள்ள நான்கு வருட திட்டம், 2017ம் ஆண்டு வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை உட்பட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் காலப் பகுதியில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேசத்துடன் செயற்படும்.
இலங்கையைப் பொறுத்தவரை, மனித உரிமைகள் பேரவை, கண்காணிப்பு, ஆலோசனை சேவைகள் மற்றும் அழுத்தங்கள், தெளிவாக்கல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் நவிபிள்ளை அம்மையார் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளார்.

ad

ad