நக்கீரன் சர்வே 18-04-2014 வெளியான அன்று நம்மைத் தொடர்புகொண்ட கடலூர் தொகுதி அ.தி.மு.க. பொறுப்பாளர்களில் ஒருவர், ""நீங்க சர்வேயைப் போட்டாலும் போட்டீங்க. இங்க எங்க எல்லாரின் தலையும் உருளுது. கார்டனில் இருந்து அமைச்சர் எம்.சி.சம்பத்தை கூப்பிட்டு செமையா டோஸ் விட்டாங்க. கலெக்டர் எஸ்.பி.ன்னு எல்லோரையும் கூப்பிட்டு நிலைமைய விசாரிக்கிறாங்க''’என்றார் பரபரப்பாக.
""நாற்பதிலும் ஜெயிக்கணும். டெல்லியில் நாம் யாருன்னு காட்டணும்னு நினைக்கிறேன். ஆனா நீங்க எலக்ஷன் வேலையை ஒழுங்காப் பார்க்காம கூத்தடிக்கிறீங்க. என்னைப் பத்தி உங்க எல்லோருக் கும் தெரியும். யார் யார் சரியா வேலை பார்க்கலைங்கிறது, விழற ஓட்டி லேயே தெரிஞ்சிடும். அப்படிப்பட்டவங்களுக்கு கடுமையான பனிஷ்மெண்ட் உண்டு''’ என ஜெ. கடு.. கடு முகத்துடன் மந்திரிகளை எச்சரிக்க, எல்லோரும் முகம் வெளிறிப்போய்விட்டார்கள். அன்றே, பதவி போய் விடுமோ என்ற பயத்தில் சகல சாமர்த்தியத்தையும் காட்டத் தொடங்கினர். மந்திரிகளின் க்ளைமாக்ஸ் நேர வேலைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
கடலூர் எம்.சி.சம்பத்
23-ந் தேதி நத்தம்பேட்டை பஞ்சாயத்துத் தலைவர் நித்தியானந்தரெட்டியாரைத் தொடர்பு கொண்ட சம்பத் ""எல்லோருக்கும் பணம் போய்டுச்சா?'’என விசாரித்தார். ரெட்டியாரோ ‘""பலபேர் வாங்கமாட்டேங்கறாங்க. பனங்காடு சிறுத்தைகள் பிரமுகர் மதியழகனை, பணத்தை வாங்கிட்டுப் போப்பான்னு கூப்பிட்டேன். எங்க ஓட்டு உங்களுக்கு விழாது. அதனால் பணம் வேணாம்ன்னு சொல்லிட்டார். தி.மு.க. புருஷோத்தமனிடம், எதுக்குவேண்ணாலும் போடுங்க. பணத்தை வாங்கிக் கங்கன்னு சொன்னேன். அவரும் வேண்டாம்ய்யான்னு சொல்லிட்டார்’என அமைச்ச்சரைத் திகைக்கவைத்தார். எனினும் பண விநியோகத்திலே கவனமாக இருந்தார் மந்திரி சம்பத்.
மதுரை செல்லூர் ராஜூ;
இதற்கிடையே புதூர் தேர்தல் அலுவலகத்தில் மந்திரி இருக்கிறார் என்று ஒரு தகவல் கிளம்ப, அந்தப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஆண்களும் பெண்களுமாக அங்கே முற்றுகையிட்டனர். ‘""மந்திரியைக் கூப்பிடுங்க. எல்லாருக்கும் பணம் கொடுத்துட்டு எங்களுக்கு மட்டும் கொடுக்கலைன்னா என்ன அர்த்தம்?''’என்றனர். ’""மந்திரி இங்கே இல்லை. நீங்க எங்களுக்கு ஓட்டுப் போடமாட்டீங்கன்னு தெரியும் அதனால உங்களுக்கு பணம் கொடுக்கவேணாம்ன்னு மந்திரி சொல்லிட்டார்''’என்றார்கள் அங்கிருந்த இலைப்புள்ளிகள். இதைக்கேட்டு கொதித்துபோன முஸ்லிம்கள் ""நீங்களும் உங்க மந்திரியும் நாசமாப் போக... மண்ணோடு மண்ணாப் போக...''’என மண்ணை வாரி இறைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கிருஷ்ணகிரி கே.பி. முனுசாமி
இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக சூரியத் தரப்புக்கு செல்வதைத் தடுக்க நினைத்த முனுசாமி, தி.மு.க.விலிருந்து அதிருப்தியில் விலகி நிற்கும் இஸ்லாமியப் பிரமுகர் சம்சுதீனை தன் வீட்டுக்கு வரவழைத்து சரி செய்தார். 23-ந் தேதி போச்சம்பள்ளி அருகேயுள்ள சந்தூருக்கு பர்கூர் துணை சேர்மன் திருமால் மூலம் மந்திரி பணத்தை அனுப்பி வைக்க, அதை பங்கு பிரிப்பதில் ர.ர.க்களுக்குள் அடிதடியாகி, வழக்கும் பதிவானது. இதைக் கேள்விப்பட்ட முனுசாமி, சந்தூருக்கு வந்து ர.ர.க்களை சமாதானப்படுத்தி தேர்தல் வேலையில் இறக்கிவிட்டார்.
மயிலாடுதுறை ஜெயபால்
சீர்காழி அருகேயுள்ள இளந்திட சமுத்திர ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட முழு தொகையும் கட்சி நிர்வாகிகளால் ஏப்பம் விடப்பட்டது என்ற புகார் கிளம்ப, அங்கு வந்த அமைச்சர் ஜெயபாலின் காரை மக்கள் மறித்து, அம்மா கொடுத்த பணம் எங்கே? என உரிமையோடு கேட்டுப்போராட ஆரம்பித்துவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் ஜெயபாலுக்கு பெரும்பாடாகி விட்டது. அதுபோல சீர்காழி நகரத்திலும் பணப்பட்டுவாடா சரியில்லை எனப் புகார் வர... அங்கேபோய் நிர்வாகிகளிடம் கதகளி ஆடிவிட்டார். அதன்பிறகு எங்கெல்லாம் சரியாகப் பணம் போகவில்லை என்ற புகார் வந்ததோ, அங்கெல்லாம் வைட்டமினை அனுப்பி வைத்து, இரவில் கரண்ட் கட் நேரத்தில் கதவைத் தட்டி விநியோகித்துவிட்டனர். எங்காவது ஓட்டு குறைஞ்சால் அவ்வளவுதான் எனச் சொல்லி கடைசி நேரத்தில் செம ஸ்பீடாக வேலை பார்த்தார் ஜெயபால்.
நாகை தொகுதிக்குட்பட்ட வேதாரண்யம் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. வேதரத்தினத்தை ஆஃப் செய்யும்படி அமைச்சர் சொல்ல... அதன்படி அவரது ஆட்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். "நீங்க மறைமுகமா சிக்னல் கொடுத்தாலே போதும். உங்க கட்சிக்காரங்களை நாங்க ஆஃப் பண்ணிடுவோம். நீங்க செட்டிலாயிடலாம்' என்று பேசப்பட... "ஒருபோதும் கட்சியோட முதுகுல குத்தமாட்டேன்'னு சொன்ன வேதரத்னம், ""என் தலைவர்கிட்டே உறுதி கொடுத்தபடி இந்த தொகுதியில் எங்க கட்சிக்கு 20 ஆயிரம் ஓட்டு லீடிங் காட்டுவேன்'' என்று சொல்லிவிட்டாராம்.
கரூர் செந்தில்பாலாஜி
"தம்பிதுரையை நாம மறுபடியும் ஜெயிக்க வைக்கணுமாண்ணே' என செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் கேட்டபோது, ""இல்லைன்னா நம்ம பதவி போயிடுமே'' எனச் சொன்ன அமைச்சர், கரூர் டவுனில் 200 ரூபாய் மட்டும் கொடுத்தால் அதிருப்திதான் வரும் என்பதால் தன் சொந்தப் பணத்திலிருந்து ஓட்டுக்கு 100 ரூபாய் கூடுதலாகப் போட்டு 300 என சப்ளை செய்யச் சொல்ல, அதன்படியே விநியோகம் நடந்தது. இதோடு வீட்டுக்கு வீடு சேலை, வேட்டியும் வழங்கப்பட்டது. "கிராமப்புறங்களைப் போல டவுனில் கமுக்கமாக வேலை செய்ய முடியாது, மீடியாக்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால், இத்தனை நாட்களாய் நல்ல முறையில் கவரேஜ் செய்த உங்களுக்கெல்லாம் பார்ட்டி' என மீடியாக்களை தனியாக அழைத்து விருந்து வைத்துக் கொண்டிருந்தார்கள் மந்திரியின் ஆட்கள். அந்த நேரத்தில் டவுன் முழுக்க அ.தி.மு.கவினர் படுஸ்பீடாக பட்டுவாடா செய்தபடி இருந்தனர்.
திருச்சி பூனாட்சி
திருச்சி தொகுதியில் கவனத்தை திசைதிருப்பாமல் பட்டுவாடா செய்யமுடியாது என்பதால், "தி.மு.க. பணம் கொடுக்கிறது, நேருவிடம்தான் பணம் மொத்தமாக உள்ளது, அங்கே ரெய்டு நடக்கிறது...' என்றெல்லாம் ஆளுந்தரப்பு மூலமாகத் தகவல்களைப் பரப்பிவிடுவதில் அமைச்சர் பூனாட்சியும் அவரது ஆட்களும் நன்றாகவே வெற்றிபெற்றார்கள். நேரு வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை போட்டுக்கொண்டிருந்த வேளையில்... ஓட்டுக்கு 200 என்ற பட்டுவாடாவை அ.தி.மு.க. தரப்பு ஜோராக நடத்திக்கொண்டிருக்க... சில பகுதிகளில் "இதுகுறித்து காவல்துறைக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் சொன்னால்தான் நடக்கும்' என மாற்றுக்கட்சியினர் சிலர் கலெக்டர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபடியே இருந்தனர். அங்குதான் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனுடன் அமைச்சர் பூனாட்சி, எம்.பி. ரத்னவேலு உள்ளிட்ட அ.தி.மு.கவினர் பேசிக்கொண்டிருந்தனர் என்ற விவரம் மாற்றுக்கட்சியினருக்கு எப்படித் தெரியும்?
தஞ்சாவூர் வைத்திலிங்கம்
"தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு எக்காரணம் கொண்டும் ஜெயிக்கக்கூடாது' என மேலிடம் போட்ட உத்தரவை நிறைவேற்றுவதற்காக, "தி.மு.க. தரப்பில் எவ்வளவு தருகிறார்களோ அதற்கு மேல் நாம்
அமைச்சர் காமராஜூடன் ஆலோசித்து உடனடியாக மன்னார்குடிக்குச் சென்றார் வைத்திலிங்கம். அங்கு வார்டு வரையிலான நிர்வாகிகளை அழைத்துப் பேசி, ""ஓட்டுக்கு 500 கொடுக்கணும். நைட்டு பணம் வந்திடும். ஒருத்தர் விடாம கொடுங்க'' என்று சொல்லிவிட்டு, பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கும் அதையே சொன்னார். அதன்படி விறுவிறு பட்டுவாடா நடக்க... பல இடங்களிலும் 500 ரூபாயில் காந்தி சிரித்தார். மந்திரியின் மனதிலும் சிரிப்பு. அந்த நேரத்தில், "மன்னார்குடியில் பணம் கொடுத்த நிர்வாகி சிக்கினார்', "பேராவூரணியில் பணம் கொடுத்தவர்களை மக்களே பிடித்து போலீசில் கொடுத்தனர்' என்ற தகவல்கள் வர... அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு டென்ஷன் அதிகமானது. சிக்கியவர்களை மீட்கவும், சிக்காமல் விநியோகிக்கவும் வியூகம் வகுத்தபடியே இருந்தார்.
தென்சென்னை வளர்மதி
தூத்துக்குடி சண்முக நாதன்
சேலம் எடப்பாடி பழனிச்சாமி
(மற்ற அமைச்சர்களின் ஆட்டம் வரும் இதழில்)