27 ஏப்., 2014


காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி பட்டதாரி பெண் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள செட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (23). இவர் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
ஜெயலட்சுமி தன்னுடன்
கல்லூரியில் உடன் படிக்கும் கரூர் அருகேயுள்ள நெரூரைச் சேர்ந்த கதிரவன் என்பவரை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகு, இருவரும் கரூர் அருகேயுள்ள அரசு காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜெயலட்சுமி வீட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயலட்சுமியின் தாய் விஜயா அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.எம். இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார்.