புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014

 லாஸ்ட் புல்லட்!

வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே தமிழுணர்வாளர்களின் கவனம் உச்ச நீதிமன்றம் நோக்கித் திரும்பிவிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் மரணதண்ட னை ரத்தான மூவர் உள்பட 7 பேரும் விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பு 24-ந்தேதி மாலையிலிருந்தே அதி கரிக்கத் தொடங்கியது. விடுதலை செய்வதில் மாநில அரசுகளுக்குள்ள உரிமைகள் குறித்த தெளிவையும் தலைமை நீதிபதி சதாசிவம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு சட்ட வல்லுநர் களிடம் இருந்தது.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாங்குடியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தலித் மக்கள் வசிக்கும் ஏரியாவுக்குள் சென்ற ஒரு தரப்பினர் நாங்க அதிகமா வாழுற ஊர் இது. இங்கே இருந்துக்கிட்டு மோதிரம் சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீங்களா எனக் கேட்டுத் தாக்குதல் நடத்திய துடன் இரண்டு வீடுகளையும் எரித்து விட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் "மறியல்' என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடியில், இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றுவதற்காக கட்சி முகவர் கள் காத்திருந்தபோது வாக்குச்சாவடி அதிகாரி வெளியே வர தாமதமானது. ஏன் என்று மற்றவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வாக்குச்சாவடி அதிகாரி அங்கிருந்த 8 ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் திறந்து வைத்து வாக்குகளை எண்ணிப் பார்த்துக்கொண் டிருந்தது தெரிந்தது. தகவலறிந்து டி.ஆர்.பாலு ஸ்பாட்டுக்கு வந்து மறு தேர்தல் நடத்தக் கோரி காவல்துறை யினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். மறியலில் மறியல் என்கிற அளவுக்கு உஷ்ணம் அதிகமானது.

நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் உள்ள இ.எம். எஸ்.மயூரா லாட்ஜில் அ.தி.மு.க  எம்.பி ஏ.கே.செல்வராஜ் ரூம் புக் பண்ணியிருப்பதும், 112ம் எண் அறை யில் பணத்தைப் பதுக்கியிருக்கிறார் என்றும் அறிந்து தி.மு.க.வினர் அங்கு முற்றுகையிட, காவல்துறையினர் அந்த அறையைத் திறந்துபார்க்கவோ, ஆளுந்தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வோ செய்யாமல் தி.மு.கவினர் மீது தடியடி நடத்த, விவரமறிந்த ஆ.ராசா இரவு 2மணிக்கு நேராக லாட்ஜூக்கு வந்து, வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கேட்டை எட்டி உதைத்து உள்ளே சென்று, அந்த அறை முன் பாக உட்கார்ந்துவிட்டார். திறந்து சோதிக்கணும் இல்லையென்றால் சீல் வைக்கணும் என ராசா வலி யுறுத்த, அவரை மிரட்டிப்பார்த்தது காவல்துறை. ராசாவின் உறுதி குறையவில்லை. அதன்பின், நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதிகொடுத்து அவரை அனுப்பி வைத்த காவல்துறை அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இரண்டு கம்யூனிஸ்ட் தோழர் களும், நாங்கள் 8 தொகுதிகளில் நிச்சயம் 1 லட்சத்துக்கு மேல் ஓட்டு கள் வாங்குவோம். போட்டியிடும் மற்ற தொகுதிகளில் 75ஆயிரத்துக்கு குறையாது என நம்பிக்கை தெரிவிக் கின்றனர். காங்கிரஸ் தரப்போ, எங்கள் இலக்கு, தொகுதிக்கு 10% ஓட்டு கள். தனித்துவிடப்பட்ட நாங்கள் இந் தளவு ஓட்டு வாங்கிவிட்டால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவும், தி.மு.க.வும் எங்கள் தயவைத்தான் நாடும். தே.மு. தி.கவைவிட நாங்கள்தான் தமிழகத் தில் பலமாக இருக்கிறோம் என்பதைக் காட்டவேண்டும் என்கிறார்கள்.

விழுப்புரம் தொகுதி வடகரை தாழனூரில் அம்மன் கோயிவில் திருவிழாவில் வசூலான பணத்தை எண்ணிக்கொண்டிருந்தவர்களிடம், ஓட்டுக்குப் பணம் கொடுக்குறீங்களா என்றபடி மடக்கிய தேர்தல் பறக்கும் படையினர் சுமார் 1லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த னர். கடுப்பான விழாக்குழுவினர், பணம் கொடுக்குறவங்களை விட்டு விட்டு எங்களை மடக்குறீங்களா என்ற படி பறக்கும்படையினரைக் கோயி விலுக்குள் சிறை வைத்துவிட்டனர். மேலதிகாரிகள் வரை தகவல் சென்று, காவல்துறையினர் வந்து பறக்கும் படையினரை மீட்க வேண்டியதாயிற்று.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ராஜா லாட்ஜில் தேர்தல் களப்பணிக் காக சீர்காழியை சேர்ந்த ம.தி.மு.க. வினர் 23 பேர் ஒருவார காலம் தங்கி யிருந்தனர். அந்த நாட்களில் ம.தி. மு.கவினர் ஒருவர்கூட புகைப்பிடிக்க வில்லை, ஹோட்டலில் உள்ள பார் பக்கம் செல்லவில்லை. இப்படிப்பட்ட தொண்டர்களை வைகோவிடம்தான் பார்க்க முடிகிறது என லாட்ஜ் லெட் டர்பேடில், அதன் மேனேஜர் கையெ ழுத்திட்ட கடிதம் ஒன்றையும் ம.தி.மு.க தொண்டர்கள் பெற்றுள்ளனர். இது வும் கடைசி நேர தேர்தல் பிரச்சாரத் தில் பயன்படுத்தப்பட, ரூம் போட்டு யோசிப்பதுங்கிறது இதுதானா என ஆச்சரியப்பட்டனர் மற்ற கட்சி தொண்டர்கள்.

ad

ad