புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014


பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும்! நரேந்திர மோடி பதில்!
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும். கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
கேள்வி: வாஜ்பாய் அரசில் 22 கூட்டணி கட்சிகள் இருந்தன. தற்போது உங்களுடன் 25 கூட்டணி தலைவர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நீங்கள் நிம்மதியாக அரசை நடத்த முடியுமா? 


பதில்: நிச்சயமாக முடியும். இது பெரிய தேசம். இங்கு மாநிலங்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பாஜக மட்டுமே 300 இடங்களில் வென்றால் கூட, 25 கூட்டணி கட்சிகளும் தேவைப்படும். 
கேள்வி: அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா?
பதில்: அது மிக முக்கியமானது. மாநில விருப்பங்களுக்கு இடமளிக்கப்பட்டால், நாடு முன்னேற்றம் பெரும். மத்திய அரசு என்பது யாரையும் தனிமைப்படுத்துவதற்காக அல்ல. எல்லோரையும் ஒருங்கிணைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்வதற்காக. 
கேள்வி: பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைத்தால் கூட, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியுமா?
பதில்: பாஜகவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் கூட, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கமாகத்தான் இருக்கும். அனைத்து கூட்டணி கட்சிகளும் அதில் இடம்பெறும்.
கேள்வி: வாஜ்பாய், அத்வானி, தற்போது நீங்கள். இந்த மூன்று பேர்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?
பதில்: ஒப்பீடு என்ற பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் மாபெரும் தலைவர்கள். நான் அவர்கள் வழியில் நடப்பவன். அவர்களோடு என்னை ஒப்பிட முடியாது. தந்தையும் மகனையும் ஒப்பிட முடியுமா.
கேள்வி: மக்கள் உங்களை பிரதமராக தேர்ந்தெடுத்தால் உங்கள் முதல் வேலை என்னவாக இருக்கும். 
பதில்: அரசாங்கத்தின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையை உருவாக்குவதே எனது முதல் பணியாக இருக்கும். இரண்டாவது முக்கிய வேலை கொள்கை முடக்கத்தை உடனடியாக சரி செய்வது. இவை இரண்டையும் செய்து விட்டால் தேசம் தன்னால் முன்னேறும். இவ்வாறு பதில் அளித்தார்.

ad

ad