புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014


 பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை: சேலம் அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பு (எ) சண்முகம் (46). இவர் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சேலம் அருகேயுள்ள வலசையூரில் இருந்து சேலம் பழைய பேருந்து
நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நடத்துநராக சண்முகமும், ஓட்டுநராக சிவக்குமாரும் பணியில் இருந்தனர்.

அந்தப் பேருந்து வீராணம் அருகேயுள்ள சின்னனூர் பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 10 பேர் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் சிவக்குமாரை தாக்கினர். பின்னர், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடத்துநர் சண்முகத்தை கத்தியால் சரமாரியாகக் குத்தினர்.

இதில் நிலைகுலைந்த சண்முகத்தை அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பேருந்தைவிட்டு கீழே இறக்கி கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர், அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.
தகவலறிந்த வீராணம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, சண்முகத்தின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார்தாகூர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
ஓடும் பஸ்சில் அரசு பஸ் கண்டக்டர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிப்பட்டி கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சண்முகம் கொலைக்கு தொடர்புடைய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று நள்ளிரவு சேலம் வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் அங்கு வந்து கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ad

ad