புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2014




""ஹலோ தலைவரே... 72.83% வாக்குப் பதிவுங்கிற பெருமை இருந்தாலும், தமிழ்நாட்டில் முதன்முதலா தேர்தலையொட்டி 144 தடையுத்தரவை தேர்தல் கமிஷனே போடுற அளவுக்கு மோசமான சூழலும் நிலவியிருக்குதே.''…

""144 தடையுத்தரவெல்லாம் இருக்கட்டும். அதனால, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறது உள்ளிட்ட முறைகேடுகள் ஏதாவது தடுக்கப்பட்டதா?''

""நீங்க கேட்கிறது சரிதாங்க தலைவரே.. எதற்காக இந்த 144ன்னு விசாரிச்சப்ப நிறைய தகவல்கள் கிடைச்சுது. சொல்றேன் கேளுங்க. உளவுத்துறை ஐ.ஜி அம்ரேஷ்பூஜாரி ஜெ.வை நேரில் சந்திச்சி ரிப்போர்ட் கொடுப்பது வழக்கம். அப்படி அவர் கொடுத்த ரிப்போர்ட்டில் அ.தி.மு.க 27, தி.மு.க 9, பா.ஜ.க. அணி 3-ன்னு சொன்னதோடு, கடைசி நேரத்தில் பர்சேஸ் செய்தால் 3 சீட்டுகள் கூடுதலா கிடைக்க வாய்ப் பிருக்குன்னு சொல்லியிருக்காரு. அதே நேரத்தில், மாவட்ட எஸ்.பிக்கள் மூலமா உளவுத்துறை டி.ஜி.பி. அசோக்குமார் ஒரு  ரிப்போர்ட் வாங்கிக் கொடுத் திருக்காரு.''

""அதில் என்ன சொல்லப்பட்டிருந்ததாம்?''

""உள்ளாட்சி அமைப்புகளில் அ.தி.மு.கவினர் தான் பொறுப்பில் இருக்காங்க. ஆனா, எந்த அடிப்படை வசதியும் நிறைவேற்றப்படலை. அதுதான் ஆளுங்கட்சிக்கு எதிரா மக்கள் மனநிலை மாறி யிருக்குன்னும், அ.தி.மு.கவுக்கு 10 முதல் 15 சீட்டுகள் தான் கிடைக்கும்னும் சொல்லப் பட்டிருக்குது. இந்த ரிப்போர்ட்டைப் பார்த்ததும் ஜெ. டென்ஷனாகி, அம்ரேஷ்பூஜாரியிடம் கடுப்படித்துவிட்டு, சரியான ரிப்போர்ட் கொடுங்கன்னு சொல்லியிருக்காரு. அதையடுத்து 19, 20 தேதிகளில் பல தகவல்களை சேகரித்து 21-ந் தேதி அம்ரேஷ் பூஜாரி கொடுத்த ரிப்போர்ட்டில் தி.முக. 16, அ.தி.மு.க 13, பா.ஜ.க அணி 10-ன்னு வந்திருக்குது. இதை எப்படி ஜெ.கிட்டே கொடுப்பதுன்னு ரொம்பவும் யோசித்த பூஜாரி, டி.ஜி.பி அசோக்குமாரிடம் கொடுக்க, அவரோ எப்போதும் போல நீங்களே கொடுத்திடுங்கன்னு சொல்லியிருக்காரு. 22ந் தேதி காலையில் கார்டனுக்குப் போன பூஜாரியை ஜெ சந்திக்கலை. தன்னோட தனிச்செயலாளர் சூரி மூலமாதான் ரிப்போர்ட்டை வாங்கினார் ஜெ.''

""அதைப் பார்த்ததும் அவரோட ரியாக்ஷன் என்னவாம்?''

""இதுவரை நம்மை ஏமாத்திக்கிட்டிருந்திருக் காங்கன்னு கோபத்தை வெளிப்படுத்துன ஜெ, 22ந் தேதியன்னைக்கு எல்லா வேட்பாளர்களையும் கார்டனுக்குக் கூப்பிட்டு செம டோஸ் விட்டிருக் கிறார். எந்தெந்த தொகுதிகள்னு சொல்லாம, 21 தொகுதிகளில் வீக்கா இருக்கோம். கட்சியிலிருந்து கொடுத்த பணம் என்னாச்சு? நிர்வாகிகள் ஒத்துழைக்கலைன்னா சொல்லச் சொன்னேனே ஏன் சொல்லலை என்றெல்லாம் கேட்டு  சத்தம் போட்டதோடு, நால்வர் அணி அமைச்சர்களுக்கும் டோஸ் விட்டு, என்ன செய்வீங்களோ தெரியாது, 21 தொகுதிகளிலும் ஜெயிச்சாகணும்னு சொல்லி யிருக்காரு.'' 

""அதனால்தான் இறுதிக்கட்டத்தில் பண மழை கொட்டுச்சா?''

""நம்ம நக்கீரன்தான், எலெக்ஷன் நடவடிக்கைகைள் ஆரம்பித்ததிலிருந்தே அ.தி.மு.கவின் பிரம்மாஸ்திரம் பணம் தான்ங்கிறதையும் 1200 கோடி மெகா பட்ஜெட்டுடன் தேர்தலை சந்திக்க ஜெ. ரெடியாயிட்டாருன்னும் தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருந்தது. தொகுதிக்கு 20சி முதல் 30சி வரை ஒதுக்கப்படு வதையும் சொன்னது. கடைசிநேரத்தில், அடிஷனலா தொகுதிக்கு 2சி ஒதுக்கப் பட, ஏற்கனவே வந்ததையும் இதையும் முறையா விநியோகிக்க வசதியா 144 தடையுத்தரவை ஆளுங்கட்சி பயன் படுத்திக்கிச்சி. 144படி நான்கைந்து பேருக்கு மேலே ஒண்ணா கூடக்கூடாது. பணம் விநியோகம் பண்ணுறவங்க ஒன்றிரண்டு பேராகத்தான் போவாங்க. அவங்களைப் பிடிக்கத்தானே அதிக ஆட்கள் தேவைப்படும். அதை 144 தடையுத்தரவு தடுத்திடுமே.. இது ஆளுங்கட்சிக்கு படுசாதகமா போயிடிச்சி. வழக்கமா ஓட்டுப் போட்டதும், அதிக இடங்களில் ஜெயிப்போம்னு சொல்லும் ஜெ, இந்தமுறை ஓட்டுப்போட்டபிறகு மீடியாக்கள்கிட்டே பேசுனப்ப, ரிசல்ட் வந்ததும் கருத்து தெரிவிக்கிறேன்னு சொன்னதோடு, தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளுக்கு எல்லா கட்சிகளும் ஒத்துழைப்புத் தரணும்னு சொன்னதை கவனிச்சிருப்பீங்க.''

""ஓட்டுப்பதிவு முடிந்தபிறகு ஜெ.வுக்கு ரிப்போர்ட் போயிருக்குமே?''

""ஓட்டுப்பதிவு நடந்துக்கிட்டிருந்தப்பவே அ.தி.மு.க. தரப்பில், கடைசி மூணு நாளில் பணம் சுனாமியா பாய்ஞ்சதால எல்லாம் சரியா ஒர்க் அவுட் ஆயிடிச்சின்னு மேலிடத்துக்கு சந்தோஷமா ரிப்போர்ட் கொடுத்துக்கிட்டிருந்தாங்க. உளவுத் துறையும் பணம் செய்த மாயாஜாலம் பற்றி ரிப்போர்ட் கொடுக்க, அதைப் பார்த்த அ.தி.மு.க. மேலிடத்துக்கு பெரிய சந்தோஷமும் இல்லை. பெரிய கவலையும் இல்லை. 20 தொகுதி சரியா இருக்கும்னும், பா.ஜ.க. கூட்டணியால் கடும் போட்டி உருவாகியிருக்கும் 12 தொகுதிகளை கணிக்க முடியலைன்னும் மிச்சமுள்ளவை தி.மு.க. அணிக்கு கைகொடுக்கும்னு ரிப்போர்ட் டில் சொல்லப்பட்டிருந்ததாம்.''

""தி.மு.க. தரப்பில் என்ன நினைக்கிறாங்க?''

""பெரும்பாலான தி.மு.க வேட்பாளர்களுக்கு டென்ஷன் தான். பணத்தை அள்ளிவிட்டு ஆடித்தீர்த்த அமைச்சர்களால் ரிசல்ட் மாறிடுமோங்கிற பதட்டம் எல்லார்கிட்டேயும் இருந்தது. எப்படியும் கடைசி நேரத்தில் கட்சியிலிருந்து பணம் வரும். பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, அவங்க 200 தந்தா நாம 50, 100 கொடுத்து சமாளிக்கலாம்னு நினைச்சிருந்த வங்களுக்கு, ஓட்டுக்கு நோட்டு கிடையாதுன்னு கட்சித் தலைமை உறுதியா சொல்லிவிட ஒட்டுமொத்தமா அப் செட். தொண்டர்களோ ஓப்பனா வேட்பாளர் கள்கிட்டேயும் மாவட் டச் செயலாளர்கள் கிட் டேயும் கதறியழ ஆரம்பிச்சிட்டாங்க. பணம் தரலைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சி உருவாக்குன வெற்றி வாய்ப்பு பறிபோயிடு மேங்கிறதுதான் அவங்க பயம்.'' 

""கடைசி நேரத்தில் தேர்தல்ல பயந்தா அதுவரைக்கும் பார்த்த வேலையெல்லாம் வேஸ்ட்டுதானே?''

""அ.தி.மு.க.வோட பண விநியோகம் பல இடங்களில் அதிருப்தி ஏற்படுத்தியதையும், ஒழுங்கா வரலைங்கிற புலம்பல்கள் ஆங்காங்கே வெளிப்பட்டதையும் பார்த்ததும் தி.மு.க ஆட்களுக்கு கடைசி நேரத்தில் வேகம் வந்திடிச்சி. பல தொகுதிகளிலும் கரண்ட் தரலை, தண்ணி தரலை, முதியோர் பென்ஷன் தரலைன்னு குமுறல்கள் இருப்பதால 200 ரூபாய் பெருசா ஒர்க் அவுட் ஆகாதுன்னு அவங்களாகவே சமாதானம் பண்ணிக்கிட்டு ஃபீல்டில் இறங்கிட்டாங்க. சில வேட்பாளர்கள் கடைசி நேர பூத் செலவு பணத்தை அதிகப்படுத்திக் கொடுக்க, அதில் சில நிர்வாகிகள் சாப்பாட்டு செலவுக்கு மட்டும் பணத்தை எடுத்துகிட்டு, மற்ற பணத்தோடு தங்கள் கையிருப்பையும் போட்டு ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத் திருக்காங்க. ஆனாலும் அதிக பணம் கொடுத்த அ.தி.மு.கவினருக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாய வாக்குகள் மாறி விழுந்திருக்குது.''

""அ.தி.மு.க.வின் பணவிநியோகம் பற்றி கோட்டைக்கு வந்து தேர்தல் கமிஷன்கிட்டே மு.க.ஸ்டாலின் புகார் கொடுத்தாரே?''

""புகார் கொடுத்ததோடு, சரியான நடவடிக்கை இல்லைன்னு மீடியாக்கள்கிட்டே பேட்டியும் கொடுத்தாரு. அவர்கிட்டே சென்னை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், ரூலிங் பார்ட்டி ஆளுங்க ஃபுல்லா பணத்தை அடிச்சிவிட்ருக்காங்க. ஆளுங்கட்சிக்காரங்க ரொம்ப குஷியா இருக்காங்க. குப்பத்துலேயெல்லாம் எகிறி எகிறி அடிக்கிறாங்கன்னு சொல்லியிருக்காங்க. இதனால ரிசல்ட் மாறாது. நம்ம லீடிங்கில் வேணும்னா கொஞ்சம் குறையும்னு சொன்ன ஸ்டாலின், வாக்குப்பதிவு நடந்தன்னைக்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் போன்போட்டு, நிலவரம் பற்றி கேட்டுக்கிட்டே இருந்திருக்காரு. தி.மு.க வேட்பாளர்கள் சில பேருக்கு அட்வான்ஸ் வாழ்த்தும் சொன்னாராம்.''

""கலைஞரும் தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமா இருக்கும்னு பேட்டி கொடுத்திருக்காரே?''

""ஓட்டுப் போட்டுட்டு பேட்டி கொடுத்தப்பதான் வெற்றிவாய்ப்பு, அ.தி.மு.கவின் பண விநியோகம் பற்றியெல்லாம் கலைஞர் பேட்டி கொடுத்தாரு. அதற்கப்புறம் அவர் அறி வாலயத்துக்கு வந்தப்ப, அவர்கிட்டே பேசியவங்களெல்லாம் 20 சீட் அளவுக்கு வருவோம்னு சொல்லியிருக்காங்க.'' 

""புதிய தலைமுறை வாக்காளர்களோட ஓட்டுகளில் பெரும்பாலானவை பா.ஜ.க அணிக்குத் தான்னு அந்த அணி தரப்பில் சொல்றாங்களே?''

""எல்லாமே மோடி அலைங்கிற நம்பிக்கைதான். கூட்டணியில் உள்ள கட்சிகள் தேர்தல் செலவுக்கான பணத்திற்காக பா.ஜ.க.கிட்டே எவ்வளவு பாடுபட வேண்டியிருந்ததும்னு கடைசி யில் ஒவ்வொரு தொகுதியில் பா.ஜ.க நிர்வாகிகள்கிட்டேயே பணம் கொடுக் கப்பட்டதுங்கிறதையும் நாம ஏற்கனவே சொல்லியிருந்தோம். பூத் செலவுக்கான காசு கூட சரியா வரலைன்னு பொன்.ராதாகிருஷ்ணன்கிட்டே கூட்டணிக்கட்சிகள் சொன்னப்ப அவர் ரொம்ப கூலா பதில் சொல்லியிருக்காரு.''

""என்னன்னு?''


""பூத் காசுங்கிற பழக்கமெல்லாம் எங்ககிட்டே கிடையாது. நாங்க ஆர்.எஸ்.எஸ்.-ல் ட்ரெய்னிங் எடுத்தவங்க. நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் போல எதையும் எதிர்பார்க்காம தேர்தல் களத்தில் வேலை பார்ப்போம். எங்க ளுக்கு வெறும் தயிர்சாதம்  போதும்னு சொல்லியிருக்காரு. ஆனா, அவர் போட்டியிடுற கன்னியாகுமரி தொகுதி யில் கடைசி நேரத்தில் பூத் செலவுக்காக பா.ஜ.க.வுக்கு பதினைந்தாயிரம் கொடுத்ததோடு, தே.மு.தி.க.வுக்கு மட்டும் பூத்துக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காரு. தே.மு.தி.க நிர்வாகிகளோ, எங்களுக்கு 10.33% ஓட்டு இருக்குது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சி களெல்லாம் தனிப் பட்ட செல்வாக் கை சொல்லலை. வேறு யாருட னாவது கூட்டணி போட்டு வாங்குன ஓட்டுகளைத்தான் சொல்றாங்க. உங்க பா.ஜ.க.வுக்குக்கூட 1.5% ஓட்டுதான் இருக்குது. நாங்கதான் வலிமையா இருக்கோம்னு சொல்ல, இந்த முறை நம்ம அணிக்கு கிடைக்கிற ஓட்டுக்கு கட்சிகளெல்லாம் காரணமில்லை. மோடி அலைதான் காரணம்னு பொன்.ராதா கிருஷ்ணன் சொல்ல, இப்பவே பா.ஜ.க தன் பெரியண்ணன் வேலையை ஆரம்பிக்குதேன்னு மற்ற கட்சிக்காரங்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.''

""நாடு முழுவதும் மோடி அலை எப்படி இருக்குதாம்?''


""எப்படியும் ஆட்சியைப் பிடிச்சிடலாம்னு பா.ஜ.க நம்புது. மோடிக்கும் அந்த நம்பிக்கை இருக்குது. குஜராத்தில் அவரோட அமைச்சரவையில் இருந்து போலி என்கவுண்ட் டர் வழக்கில் சிக்கிய அமித் ஷாதான் இப்ப உத்தரபிரதேச மாநிலத்துக்கு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர். அதிக சீட்டுகள் உள்ள மாநிலமான உ.பியில் நல்ல வெற்றி கிடைக்கும்னும், மோடி பிரதமராவார்-நான்தான் மத்திய உள்துறை அமைச்சர்னும் ஓப்பனாவே சொல்றாராம்.'' 

""மோடி என்ன சொல்றாராம்?''

""அதை நான் சொல்றேன்.. .. பா.ஜ.க தனித்து 220 சீட்டுகளுக்கு மேல் வந்தால்தான் நான் பிரதமர் பதவி ஏற்பேன். அதற்குக் குறைந்தால், கூட்டணிக் கட்சிகளையோ வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளையோ நம்பி பிரதமர் பதவி ஏற்க விரும்பலை. அப்படியொரு ஆட்சி அமைத்தால் எதையும் செய்யமுடியாது. என் பெயரைக் கெடுத்துக்க விரும்பலை. அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால், ராஜ்நாத்சிங் பிரதமராகட்டும். அடுத்த தேர்தலில் பா.ஜ.க 300க்கும் அதிகமான சீட்டுகள் ஜெயிக்கும். அப்ப பிரதமர் பதவி ஏற்பேன்னு சொல்லிட்டு, இம்முறை 220க்கும் அதிகமான சீட் பா.ஜ.கவுக்கு கிடைக்கணும்ங்கிறதுக்காக 10 நாட்களா விரதம் இருக்காராம் மோடி.'' 


 72.83%  -கட்சிகளின் எதிர்பார்ப்பு!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் வாக்குப்பதிவு 72.83% எனத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. அதிகப் பணம் கொடுத்துள்ளோம் அதனால்தான் இந்தளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன என ஆளுங்கட்சியினர் உற்சாகமாகச் சொல்கிறார்கள். தி.மு.க தரப்பிலோ, ஆட்சி மீதான மக்களின் கோபம்தான் ஓட்டுகளாகப் பதிவாகியிருக்கிறது என்றும் இது தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள், மோடி அலையால் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததே இந்த வாக்குப்பதிவு சதவீதத்திற்குக் காரணம். அதனால் இது எங்களுக்குத்தான் சாதகம் என்கிறார்கள். 
வாக்குப்பதிவு சதவீதம் வெளியானபிறகு, தே.மு.தி.க நிர்வாகிகள் சேலம், திருப்பூர் தொகுதிகளை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்க, பா.ம.க தரப்பில் தர்மபுரி மீது பலத்த நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.கவினர் கன்னியாகுமரி, கோவை, வேலூர் தொகுதிகளை நம்புகின்றனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தனது நிர்வாகிகளிடம் விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், தூத்துக்குடி தொகுதிகள் மீது அதிக நம்பிக்கையை வெளிப் படுத்தியுள்ளார். வாக்கு சதவீதத்திற்கு அரசியல் கட்சிகள் ஒவ்வொரு காரணங்கள் சொல்ல, தேர்தல் ஆணையமோ, நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கமல், கௌதமி போன்ற முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு டி.வி விளம்பரங்களை ஒளிபரப்பினோம். இணையதளம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினோம். எஸ்எம்எஸ் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு நேரத்தில் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்துக்கும் விடுமுறை விடச்செய்தோம். இவையெல்லாம்தான் வாக்கு சதவீதத்திற்குக் காரணம் என்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் படித்தவர்கள் நிறைந்துள்ள நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் தமிழக அளவிலான சராசரிக்கு குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

ad

ad