புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2014


காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், 3-வது அணி ஆதரவு குறித்து பேசுகிறது: வெங்கய்யா நாயுடு
மக்களவைத் தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. மே 12-ல் இறுதிக் கட்டத் தேர்தலும் மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் பரூக்காபாத் தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான பிட்டாராமில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷி பேசியதாவது:


பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம். தேவைப்பட்டால் 3-வது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், மூன்றாவது அணியில் உடன்பாடு இல்லை என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமே கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே சல்மான் குர்ஷித் கருத்து குறித்து வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான், மூன்றாவது அணிக்கு ஆதரவு குறித்து பேசுவதாக வெங்கய்யா நாயுடு விமர்சித்துள்ளார்.