20 டிச., 2014

சண்மாஸ்டரின் மனைவி கைது 
இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட மூவர் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலைய த்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா.விசாரணை களுக்கு ஆவணங் களை சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்ட ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவி க்கின்றன.

சண்மாஸ்டரின் மனைவியிடம் மேற் கொள்ளப்பட்ட விசார ணைகளில், தனது கணவர் இந்தியாவில் உள்ளார் என்றும் அவரிடமே தாம் செல்லவிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிற
து.