புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2014

சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். 
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை
நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள், மற்றும் ஓசியானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 30 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  இதில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். உள்நாட்டு பிரச்சினைகளையும், வெளிநாட்டு பிரச்சினைகளையும் உங்கள் தலைவர் எப்படி கையாள்கிறார் என்ற அடிப்படையில் இந்த ஆய்வுகள் எடுக்கப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுப்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் சிறந்த தலைவர்களில் 2வது இடத்தை பிடித்துள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் பெற்றுள்ள புள்ளிகள் 7.5 ஆகும். அவருக்கு சற்று குறைவாக 7.3 புள்ளிகள் பெற்ற மோடி 2-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெர்மனி பிரதமர் அங்கேலா மெர்கெல் 7.2 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பெற்றார். 4-வது இடத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா (6.6 புள்ளி), 5-வது இடத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் (6.5), 6-வது இடத்தை பிரெஞ்சு அதிபர் பிரான்காயிஸ் ஹாலாண்டே (6.3), 7-வது இடத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (6.1), 8-வது இடத்தை ரஷிய அதிபர் புதின் (6) ஆகியோர் பெற்றுள்ளனர். 

அடுத்த இடங்களை பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோரும் பிடித்துள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகளை ஹார்வர்டு கென்னடி பள்ளியின் ஜனநாயக நிர்வாகம் மற்றும் கண்டுபிடிப்புகள் மையம் வெளியிட்டுள்ளது

ad

ad