புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2014

சட்ட விரோத முறையில் ஆளுநர் பதவி வகிப்பு முதலமைச்சர் தெரிவிப்பு 
கடந்த 5 வருடங்களாக வடக்கு மாகாண ஆளுநரும் பிரதம செயலரும் சட்ட விரோ தமான முறையிலேயே பதவியிலிருந்ததாக வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையில் 2015 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விவாதம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண பிரதம செயலர் மற்றும் ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறை யில் எந்த சொந்த பிரச்சினையில்லை.

வடக்கு மாகாண பிரதம செயலரினை பொறுத்தவரையில் அவர் ஒரு முறைமைக்குள் சிறைப்பட்டுள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக வடக்கிற்கு மாகாண சபை உருவாக்கப்பட முன்னர் ஆளுநரோ அல்லது பிரதம செயலரோ பதவியிலிருக்க முடியாது.

மாகாண சபை இல்லாத கால த்தில் ஆளுநரும் பிரதம செயலரும் பதவியிலிருந்து மாகாண சபையின் பணிகளினை செய்தால் அது சட்டத்திற்கு முரணானதாகும்.

வட மாகாண சபை வந்தவுடன் 31ஆவது இலக்கத்தில் எது கூறப்பட்டுள்ளதோ அதனை செய்ய வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு.

அந்த வகையில் ஆளுநரும் பிரதம செயலரும் புதிதாக நியமிக்கப்படல் வேண்டுமென அவர் தெரிவித்தார்.

ad

ad