புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2014

இரத்தக்கறை படிந்தவர்களின் கையால் செய்யப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது ; சரவணபவன் எம்.பி 
யாழ்.விஷன் கிருஸ்ணா அறநெறிப் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு விழாவும், புதிய கட்டடத் திறப்பு விழாவும் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது.


கோணாவளை வீதி கொக்குவிலில் அமைந்துள்ள குறித்த அறநெறிப் பாடசாலைக்கென  புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாவெட்டி திறந்துவைத்தார்.

க.சுசீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த  நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபையின் பேரவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும்,  சி. மாணிக்கராஜாவும் பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன் ,

வடமாகாணம் மதுபானப் பாவனையில் இலங்கையில் முதலிடத்தில் நிற்கின்றது. இன்று யாழ். பல்கலைக்கழகத்தை சுற்றி ஏராளமான மதுபானக்கடைகள் உள்ளன. எனவே நாம் அந்த நிலைமைக்கு எவ்வாறு சென்றோம் என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அதன் பின்னணியில் அரசியல் இருக்கின்றது. இதை ஊக்குவிப்பது எம்மவர்கள் அல்ல அனால் அடிமையாக்குகின்றார்கள்.

அதுமட்டுமல்லாது தற்போது கல்விச்சாலைகள், அறநெறிப் பாடசாலைகள், மற்றும் முன்பள்ளிகளை அரம்பித்து வைப்பதற்கும், வேறு பல நிகழ்வுகளுக்கும் இரத்தக்கறை  படிந்தவர்கள் போகின்றார்கள். அவர்களும் அழைக்கின்றார்கள் ஏதாவது தருவார்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று.

இவ்வாறு இரத்தக்கறை படிந்தவர்களால் ஆரம்பித்து வைக்கப்படும் எந்தவொரு காரியமும் நிலைக்காது என்பதை அப்படி அழைப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்,என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பாடசாலையானது அருணா சுசீந்திரன் தம்பதிகளால் கடந்த வருடம் சொந்த நிதியில் ஸ்தாபிக்கப்பட்டு, புதிதாக கட்டிடம் அமைக்கப்பட்டு இன்று இரண்டாவது ஆண்டில் 144 மாணவர்களுக்கு அறநெறிக் கல்வியை புகட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 




ad

ad