20 டிச., 2014

பாஜக பொதுக்கூட்டத்தில் கங்கை அமரன் ( படங்கள் )
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இன்று மதியம் சென்னை வந்தார்.  சென்னை மறைமலை நகரில் மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். நாளை காலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட தலைவர்களுடனும், அவர் ஆலோசனை நடத்துகிறார்.

 கொச்சியில் இருந்து விமானம் மூலம், இன்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு, தமிழக பாஜக சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ், தேசிய செயலர் சதீஷ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். நாளை காலை 9:00 மணிக்கு, பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயம் செல்கிறார். அங்கு மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் முடிந்ததும், பிற்பகல் 12 மணியளவில், பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். பின்னர், விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து டில்லி திரும்புகிறார். 

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர்- பாடலாசிரியர்- இயக்குநருமான கங்கை அமரன், அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவிருக்கிறார்.  இதை முன்னிட்டு அவர் மறைமலை நகரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றூள்ளார்.