20 டிச., 2014

30 அடி உயரத்திலிருந்த விழுந்து இறந்ததாய் யானையை இழந்து தவிக்கும் குட்டி யானை
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு பெண் யானை இன்று இறந்துக் கிடந்தது. அதன் அருகே கண்ணீர் வடித்தபடி இறந்த யானையின் ஒன்றரை வயது ஆண் யானைக்கன்று நின்றிருந்தது.  

இறந்த யானையின் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த சில உள்ளூர்வாசிகள் முயன்றனர். இதைக் கண்டு ஆவேசமடைந்த குட்டி யானை அவர்களை விரட்டிச் சென்று தாக்கத் தொடங்கியது. இந்த பாசப் போராட்டத்தில் குட்டி யானையின் தந்தம் பாய்ந்து ஒருவர் படுகாயமடைந்தார்,

கூடலூர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், தற்போது மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயை இழந்து தவிக்கும் அந்த குட்டி யானையை அப்பகுதியில் அடிக்கடி உலவிவரும் ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்த்து வைப்பதில் மாவட்ட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.