20 டிச., 2014

கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.

நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்