20 டிச., 2014

நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதியா? 
நாமல் ராஜபக்ச உப ஜனாதிபதி போல செயற்படுவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
 
இளைஞர்கள், யுவதிகளுக்கு உண்மை என்ன என்பது புரியும் எனவும், அவர்கள் குரக்கன் சால்வை மாயையில் சிக்க மாட்டார்கள்.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அரசில் இருக்கும் எவரும் விரும்பவில்லை.
 
நாமல் ராஜபக்ச மாத்திரமே அரசிற்கு ஆதரவாக நாட்டில் இருக்கும் ஒரே இளம் அரசியல்வாதி. நாமல் உப ஜனாதிபதியை போல் செயற்படுகிறார்.
 
அவரை ஐயா என்று அழைக்கும் நிலைமை அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல், கலை, விளையாட்டு என அனைத்தையும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளனர். 
 
அதிகாரிகள் வெறும் பொம்மைகள் மாத்திரமே. இந்த நிலைமை மாற்றியமைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளருடன் இணையுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.