புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2021

பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட எரிபொருள் விலை!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பெட்ரோலின் தற்போதைய விலை லிட்டருக்கு 1.36 பவுண்டை எட்டியுள்ளதால், இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதால், அங்கு லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

இதனால், எரிப்பொருள் உட்பட அனைத்து பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு, நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.36 பவுண்ட் எட்டியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின் படி, பெட்ரோல் விலை ஒரு வாரத்தில் 0.91p(லிட்டருக்கு) உயர்ந்து இன்று, அது 136.1p ஆகவும், டீசல் விலை 137.9p-யில் இருந்து 139.2p ஆகவும் உயர்ந்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பின், பெட்ரோலின்((136.9)) விலை மிகவும் அதிக அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவர்கள் பற்றாக்குறை காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் இனி கிடைப்பது கடினம் என்பதால், மக்கள் இதை வாங்கி சேமித்து வைக்க துவங்கிவிட்டனர். இதுவும் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒருவகை காரணம் என்று கூறப்படுகிறது.

   
   

ad

ad