புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2021

லண்டனில் £2,000 பவுண்டுகளால் அதிகரித்துள்ள GAS BILL: மின்சார BILL : எங்கே கொண்டு போய் விடப் போகிறது என்று தெரியவில்லை ?

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் 1ம் திகதி அக்டோபர் மாதத்தோடு, வீட்டில் பாவிக்கும் கேஸ் மற்றும் மின்சாரத்தின் விலை சுமார் 20% விகிதத்தால் அதிகரித்துள்ள நிலையில். அடுத்த வருடம்(2022) April மாதம் மேலும் விலை அதிகரிக்கப்படும் என கம்பெனிகள் தெரிவித்துள்ளது. இதனால் சாதாரண வீடு ஒன்று(2 அறை வீடு), வருடத்திற்கு சுமார் £2,000 பவுண்டுகளை செலவிடும் நிலை தோன்றியுள்ளது. கேஸ் மற்றும் மின்சாரத்தோடு சேர்ந்து வருடம் ஒன்றுக்கு சராசரியாக 2,000 பவுண்டுகளை வீட்டு உரிமையாளர்கள் கட்டவேண்டி இருக்கும். இது மிகக் குறைந்த கட்டணம் என்றும். 3 – 4 அல்லது 5 அறைகளை கொண்ட பெரிய வீடுகள், இன்னும் அதி கூடிய கட்டணங்களை கட்டவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இன் நிலையில்…


பிரித்தானியாவில் இயங்கி வரும் இருப்பு உருக்கு ஆலைகள் பல மூடப்பட உள்ளது. காரணம் இந்த கேஸ் விலை அதிகரித்துள்ளமையே என்று கூறப்படுகிறது. இதனால் பல நூறு தொழிலாளிகளின் வேலை கேள்விக் குறியாக உள்ளது. பிரித்தானியாவில் சராசரியா ஒரு வீடு வருடம் ஒன்றிற்கு £1,277 பவுண்டுகளையே மின்சாரம் மற்றும் கேஸ் பில்லாக கட்டி வருகிறது. ஆனால் இந்த தொகை தற்போது 2,000 பவுண்டுகளாக அதிகரித்துள்ளமை, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். ரஷ்யாவில் இருந்து வரும் இயற்கை வாயு, 5,000 ஆயிரம் மைல்கள் கடந்து பைப் ஊடாக ஜேர்மனி வந்து பின்னர், 745 மைல்களை கடந்து , பிரித்தானியா வருகிறது. Source: Rising energy prices may push average annual bills past £2,000 for first time – costing many an extra £900: Shutdown for winter: UK Steel says rocketing energy costs could ‘strangle’ production as factories warn they will have to close within weeks amid fears thousands of jobs are in jeopardy:

உலகில் பல நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை(கேஸ்) சப்பிளை செய்யும் மிகப் பெரிய நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்யா நினைத்தால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் ஒரே நொடியில் இருட்டிலும் குளிரிலும் விட முடியும். ஆனால் ரஷ்யாவோடு ஏட்டிக்கு போட்டியாக தாம் இருப்பதாக பல நாடுகள் நடித்துக் கொண்டு இருக்கிறது. பிரித்தானிய மக்களின் பெரும் பணம், ரஷ்யாவுக்கு தான் செல்கிறது என்பதனை எவரும் மறுக்க முடியாது. காரணம் 35% விகிதமான எரிவாயுவை ரஷ்யா தான் சப்பிளை செய்கிறது என்பது ஒரு புறம் இருக்க, ரஷ்யாவின் பல பினாமி கம்பெனிகள் மேலும் 28% சத விகித எரிவாயுவை சப்பிளை செய்கிறது என்பது உண்மை நிலை.

ad

ad