புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2021

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம்- கனேடிய தூதுவரிடம் பீரிஸ் தீவிர கரிசனை!

www.pungudutivuswiss.com


ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ சட்ட மன்ற தீர்மானம் தொடர்பாக, இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிடம் தெரிவித்துள்ளார்

நேற்று நடந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் இலங்கைக்கு கனடா வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் நன்றி பாராட்டியுள்ளார்.

கனடாவின் தற்போதைய கோவிட் நிலைமைகள் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றாரியோ சட்ட மன்றில் இலங்கையில் இனச் சுத்திகரிப்பு இடம்பெற்றதாக தனிநபர் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இதனை எதிர்ப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானத்திற்கு எதிராக ஒன்றாரியோ உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பயங்கரவாத பிரச்சினைகளிலிருந்து மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த தீர்மானம் நிறைவேற்றம் மாகாண சட்டமன்றினால் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனவும் இது குறித்த மேலதிக விபரங்களை வழங்குவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிதுள்ளார்.

ad

ad