புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2021

இலங்கை–கனடா நட்புறவு சங்கத் தலைவராக சுரேன் - பொருளாளராக சிறிதரன்!

www.pungudutivuswiss.com

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவு செய்யப்பட்டார்.ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – கனடா பாராளுமன்ற சங்கத்தின் மறுசீரமைப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் உதயன கிரிந்திகொட செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் பிரதித் தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.பாராளுமன்ற உறுப்பினர்களான கீதா குமாரசிங்ஹ உதவிச் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுநலவாயத்தில் பகிரப்பட்ட பங்கெடுப்பு, கொழும்புத் திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி உதவிகள் மற்றும் இதற்கு மேலதிகமாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய சமூகம் போன்றவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர நட்புறவு காணப்படுவதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் தெரிவித்தார்.

ad

ad