புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2021

"நீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியது" - விஜய் வேதனை!

www.pungudutivuswiss.com

இறக்குமதி கார் விவகாரத்தில் தனிநீதிபதியின் கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு நடிகா் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் (வழக்குச் செலவு) விதித்து உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுதாரா் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட கண்டனக் கருத்துகள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில் இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என நடிகர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை குற்றவாளி போல காட்டியுள்ளன. நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஆகஸ்ட் 7ஆம் திகதி செலுத்திவிட்டோம் வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியதும் தேவையற்ற கருத்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ad

ad