புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2021

காகிதங்களின் இறக்குமதிக்கும் தடை?- பத்திரிகைகள் முடங்கும் ஆபத்து.

www.pungudutivuswiss.com

பத்திரிகைகள் உள்ளிட்ட அச்சு தொழிற்துறைக்கு அவசியமான காகிதங்களை இறக்குமதி செய்வதற்கு  கடும் இறக்குமதி கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காகித இறக்குமதியை அத்தியாவசியமற்ற பொருட்கள் பட்டியலில் சேர்த்து இவ்வாறு கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நிதி அமைச்சு கலந்துரையாடி வருவதாக நம்பகரமாக அறிய முடிகிறது.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றில் முன் வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், வரவு செலவு திட்ட ஆவண தயாரிப்பு தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இறக்குமதி தடை அல்லது இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கும் பொருட்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடலிலேயே கடதாசிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் ஆரயப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறான நிலையில் வர்த்தகர் ஒருவர் பெருமளவு காகிதங்களை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், காகிதங்கள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அது பத்திரிகை அச்சுத் துறையை மிக மோசமாக பாதிக்கும் என அவதானிகள் எச்சரிக்கின்றனர்.

ad

ad