புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2021

13 அமுலாக்கம், மாகாண சபை தேர்தலை வலியுறுத்தினார் இந்திய வெளிவிவகார செயலாளர்!

www.pungudutivuswiss.com


13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக  முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர்  ஹர்ச வர்தன் ஸ்ரிங்க்லா தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ச வர்தன் ஸ்ரிங்க்லா தெரிவித்துள்ளார்

தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இந்திய வலியுறுத்திய அதே நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என்பதையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன், டெல்லியில் விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரீங்க்லாநேற்று பிற்பகல் ஐந்து மணிக்கு ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததுடன் இந்திய வெளிவிவகார செயலாளருடன், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டிருந்தார்.

காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுடனும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச தரப்பினருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் குறித்தும், நேற்று முன்தினம் மேற்கொண்ட யாழ், மற்றும் திருகோணமலை விஜயம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் தமிழர் விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்,

சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கேசரிக்கு கூறுகையில், அரசியல் தீர்வு குறித்தே முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டது, குறிப்பாக 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவது மற்றும் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்துவது குறித்து வெளிப்படையாக கருத்துக்களை கூறியுள்ள நிலையில் அரசங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

காலையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போதும் இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்கு பின்னரும் அதற்கு முன்னரும் கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ச வர்தன் ஸ்ரிங்க்லா வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் அதன் ஊடக முழுமையாக அதிகார பகிர்வை நோக்கி செல்வதும், நாட்டில் தமிழ் மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்ற இதன் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும், அதிகார பகிர்வின் மூலமாக அர்த்தமுள்ள நகர்வொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இந்தியாவின் சார்பில் தாம் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தி அதனூடாக 13ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும், அதிகார பகிர்வை நியாயபூர்வமானதும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக எம்மிடம் தெரிவித்தார்.

எனினும் மாகாணசபை தேர்தலை நடத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கூறியதாகவும், அவ்வாறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதையும் என்னிடத்தில் கேட்டார். சட்ட சிக்கல்கள் இல்லை என்பதை அவருக்கு நான் தெளிவுபடுத்தினேன். அவற்றை விபரமாக கேட்டறிந்துகொண்டார்.

இந்நிலையில், தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள், அரசியல் தீர்வு விடயங்களில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இந்திய வலியுறுத்திய அதே நிலைப்பாட்டில் நாமும் உள்ளோம் என்பதையும், அதே நேரத்தில் அதிகார பகிர்வை அர்த்தமுள்ளதாக்க 1987 ஆம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை, மஹிந்த ராஜபக் ஷ வரையில் இந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் எதுவுமே இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே இனியும் காலதாமதமாக்காது அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

இந்த விடயங்களில் 1983ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவின் பங்களிப்பு உள்ளது, அதற்கு எமது நன்றிகளை நாம் கூற வேண்டும், ஆனால் இன்னமும் எமக்கான முழுமையான தீர்வுகள் கிடைக்கவில்லை. அவை முழுமையாக்கப்பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம், தடைகள் இல்லாது அரசியல் அதிகார பகிர்வை இந்தியாவின் தலையீட்டில் முழுமையாக்கப்பட வேண்டும்,புதிய அரசியல் அமைப்பின் ஊடக ந்த நோக்கங்களை அடையவே தாம் முயற்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இந்தியா தலையிட்ட காரணத்தினால் தான் 13ஆம் திருத்தம் என்ற ஒன்று கிடைத்தது, எனவே அதனை முழுமையாக்கவும், அதனை தாண்டிய அதிகார பகிர்வை நோக்கி முன்செல்ல இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதையும், அரசாங்கத்திற்கு இந்த விடயங்களில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் விரைவாக மாகாணசபை தேர்தலை நடத்தி 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தினோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறிய அதே நிலைப்பாடே இந்தியாவின் நிலைப்பாடாகவும் உள்ளது. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளை வெற்றிகொள்ள இந்தியாவின் முழுமையான பங்களிப்பு இருப்பதுடன் இந்த நகர்வுகளை முன்னெடுப்பதில் இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்பதை எம்மிடம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இந்தியாவின் ஆர்வமும், ஆதிக்கமும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏற்கனவே இந்தியா முன்னெடுத்துள்ள திட்டங்களை அவ்வாறே முன்னெடுக்கும் என்பதையும், வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தி, முதலீட்டு வேலைத்திட்டங்களை அடுத்து வரும் காலங்களிலும் முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் விரைவில் மீண்டும் சந்திப்பதாகவும், அது குறித்த சந்திப்பு திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் எம்மிடத்தில் கூறியுள்ளார். அதற்கமைய விரைவில் டில்லியில் சந்திப்புகள் இடம்பெறும் என்பதையும் அவர் தெரிவித்ததாக சுமந்திரன் எம்.பி கூறினார்.

   
   

ad

ad