புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2021

யாழ். நகரில் அதிக மழை வீழ்ச்சி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையில் அச்சுவேலியில் 12.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்,பருத்தித்துறையில் 5.4 நயினாதீவில் 4.1, யாழ்ப்பாணத்தில் 62.3 , யாழ்ப்பாண நகர் பகுதியில் 79.0, நெடுந்தீவில் 2.2, சாவகச்சேரியில் 10.8, தெல்லிப்பளையில் 15.5,அம்பனில் 15.5, திருநெல்வேலியில் 41.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு ள்ளதாகவும் தெரிவித்தார்.

ad

ad