பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி