கோப்பாய் தெற்கு சூரியோதய சனசமூக நிலைய 70 ஆவது ஆண்டு நிறைவு கட்டிட திறப்பு விழா இன்று பி.ப 2.30 மணியளவில் நிலைய முன்றலில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும் குறித்த கட்டடித்திற்கு வரவுசெலவுத்திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதியை இந்தக் கட்டிட நிர்மாணிப்புக்கென வழங்கியுள்ளார். இதற்காக கோப்பாய் சனசமூக நிலையம் சார்பில் அவர் கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை அவர் சனசமூக நிலைய பயன்பாட்டிற்காக பயனுள்ள ஒருதொகுதி நூல்களையும் அன்பளிப்பு செய்தார்.
மேலும் இங்கு கலை நிகழ்ச்சிகளும்,புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.