இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் 36 பேர் இன்று இலங்கை வந்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவே இவர்கள் இங்கு வந்துள்ளனர்.
(Asian Elections Monitoring Organization) ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்களான இக்குழுவினர், பல உலக நாடுகளில் கண்காணிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட அனுபவசாலிகள் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இன்று முதல் இவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.