புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

பலமான நிலையில் நியூசீலந்து


மக்கலத்தின் அதிரடியான சதம் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்குமிடை யிலான முதலில் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆடுகளம் புற்கள் நிறைந்ததாக முழுக்க முழுக்க வேகப் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மஹேல ஜெயவர்த்தனவின் ஓய்வுக்கு பிறகு இலங்கை அணி களம் இறங்கும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
காயத்தால் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் இந்த டெஸ்டில் விளையாடவில்லை.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதிரடியாக துடுப்பெடுத் தாடிய நியூசிலாந்து அணித் தலைவர் பிரன்டன் மக்கலம் 195 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
நேசம் 85 ஓட்டங்களையும் வில்லியம்சன் 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மத்யூஸ் 2 விக்கெட்டினை கைப்பற்றினார். நேற்றைய முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 429 ஓட்டங்களை பெற்றது. போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்றாகு
ம்

ad

ad