புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையொன்றுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையொன்றுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிஷாந்த முத்துஹெட்டிகம எதிரணியின் பிரசார மேடையை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகின்றது
நீர்கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதியமைச்சரை எதிர்வரும் 30-ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பத்தேகம மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கடந்த 24 ம் திகதி பிடியாணை ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
அதன்பின்னர் கடந்த 26ம் திகதி அதிகாலை அமைச்சர் முத்துஹெட்டிகம கட்டுநாயக்க விமானநிலையத்தின் முக்கிய பிரமுகர்களுக்கான பாதை ஊடாக சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியிருந்தார்.
இன்று பகல் 11.15 மணியளவில் அமைச்சர் முத்துஹெட்டிகம சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தபோது சிறப்பு பொலிஸ் குழுவொன்றினால் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 17 ம் திகதி காலி, வந்துரம்ப பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சேதப்படுத்தியதாக நிஷாந்த முத்துஹெட்டிகம மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad