புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

மைத்திரிக்கு ஆதரவு? தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு நாளை



நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்றிரவு கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் நாளை இது அறிவிக் கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இக்குழுக்கூட்டம் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்  தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறி த்து தீர்மானக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபாலவை ஆதரிப்பது என நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டாலும், நாளை 30-ம் திகதியே கூட் டமைப்பு தமது தீர்மானத்தை அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழ்; மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவிக்க கூடாது என்று, கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் சுயமாக தீர்மானம் மேற்கொள்ள இடமளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என தனித் தனியாக கலந்துரையாடி பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. எனினும் இது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை.     

ad

ad