புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவிப்பு



இந்தியாவுக்கு எதிரான 3- வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2 வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இருந்த போது மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் துவங்கியது.  சற்று முன் வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 530 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 126.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 462 ரன்கள் குவித்தது. 

நான்காவது நாள் ஆட்டத்தை இன்று துவங்கிய இந்திய அணியை ஜான்சன் நீண்ட நேரம் நிலைக்க முடியவில்லை. நேற்று 462 ரன்கள்  குவித்திருந்த நிலையில், மேற்கொண்டு 3 ரன்களை சேர்த்த இந்திய அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைதொடர்ந்து 65 ரன்கள் முன்னிலையுடன் தனது 2 வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விரைவாக ரன்களை சேர்த்தது. குறிப்பாக டேவிட் வார்னர்  அதிரடி காட்டினார். இதனால் அந்த 12 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்களை தாண்டியது. இதில் வார்னர் மட்டும் 38 ரன்களை சேர்த்திருந்தார். ஒருவழியாக வார்னரை 40 (42 பந்துகள் , 6 பவுண்டரிகள்) ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார்.

 இதையடுத்து ரோஜர்சுடன்  வாட்சன் கோர்த்து ஆடி வருகிறார்.  ரோஜர்ஸ் 33 ரன்களுடனும் வாட்சன் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை குவித்து உள்ளது. இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே ஆட்டம் மழையால்  பாதிக்கப்பட்டது.

பின்னர் மழைவிட்டதால் மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி  34.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை குவித்து ஆடிவருகிறது. இந்திய அணியை விட 203 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது.  

ad

ad