புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!

ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாடானையில் உள்ள அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக ‘ஹலோ போலீஸ்’ மூலம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (27ஆம் தேதி) அதிகாலை திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீஸார் அந்த கட்டடத்தில் உள்ள அறை ஒன்றை சோதனையிட்டனர்.
அப்போது அந்த அறையில்  ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கியின் திருவாடானை கிளை மேலாளராக பணியாற்றி வரும் சந்திரசேகர், அந்த கட்டடத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் சசிகுமார் மற்றும் நாமக்கல்லை சேர்ந்த இரு பெண்கள் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை திருவாடானை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நால்வரும் விபச்சாரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்களுக்கு புரோக்கராக செயல்பட்ட ரஜினிதர்மா என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதன்பின் நேற்று மாலை ஐந்து பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். திருவாடானை நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருந்ததால் இவர்கள் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். போலீஸாரிடம் சிக்கிய சந்திரசேகர், சசிகுமார், ரஜினிதர்மா ஆகிய 3 பேரையும் சொந்த ஜாமினில் விடுவித்தும், இளம் பெண்கள் இருவரையும் மதுரையில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இரு பெண்களும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விபச்சார வழக்கில் சிக்கியவர்கள் ஆளும் கட்சியின் வி.ஐ.பி.க்கு வேண்டப்பட்டவர்கள். இதனால் இவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்திற்கு  போலீஸ் வாகனத்தில் அழைத்து வருவதற்கு பதிலாக தனியாருக்கு சொந்தமான சொகுசு கார்களில் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர் திருவாடானை போலீஸார். 

ad

ad