புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்

அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
இதே கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய இலங்கைக்குள் பிரிவினை வாதத்தை உருவாக்கக் கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் வாக்குகளுக்காக தன்னால் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியவர்கள் உறுதியாக மறுத்து விட்டதாகவும் அமைச்சர் சுசில் நேற்று கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ. ல. மு. கா. வின் ஆதரவு இல்லாமலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 18 லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்ததனால் இவர்களது ஆதரவின்மை வாக்கு வங்கியில் பாரிய சரிவினை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
அம்பாறையில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர வேண்டுமென்பதே ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த கோரிக்கையாகுமென சுட்டிக்காட்டிய அமைச்சர் சுசில், இதே போன்றதொரு வடிவத்திலேயே எல். ரீ. ரீ. ஈ. யினரும் வடக்கு கிழக்கில் தனியானதொரு நிர்வாக மாவட்டம் கோரியிருந்தனரெனவும் தெரிவித்தார்.
ஆனால் ஜனாதிபதியவர்கள் நாட்டை மட்டுமல்ல மாவட்டத்தைக்கூட பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்பதில் உறுதியாகவிருந்தார். அதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலக நேரிட்டது.
எனினும், எதிரணியினர் அவர்களை அணைத்துக்கொண்டுள்ளதன் மூலம் ஸ்ரீ ல. மு. கா.வின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களை மையப்படுத்தி தனியானதொரு நிர்வாக மாவட்டம் உருவாக்க அனுமதித்தால், அங்கு வாழும் தமிழர்களின் நிலைப்பாடு என்னவாகும் எனவும் அமைச்சர் சுசில் கேள்வியெழுப் பினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரையில் அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைக்காத போதிலும் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையே இது பாரதூரமான விளைவினை ஏற்படுத்தக்கூடும் என்ற தூரநோக் குடனேயே நாம் சிந்தித்து செயற்பட்டோம். 

ad

ad