பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாழ்ந்து வரும் பெரும்பான்மை இந்து தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றார்கள்.
இலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவை மீளவும் ஜனாதிபதியாக்கினால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும்.
எனவே தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
கடந்த காலங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக சுப்பரமணியன் சுவாமி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.