புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம்
இராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் கிண்ணியாவின் திருகோணமலைக்கான பாதை தவிர அனைத்துப் பகுதிகளும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. கிண்ணியா- தம்பலகாமம், கிண்ணியா மூதூர் பாதைகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் இப்பகுதிகளில் படகு மூலமான போக்குவரத்து மூலமாகவே மக்கள் மூதூர் மற்றும் தம்பலகாமம் இடையிலான போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் இன்று கிண்ணியாவில் நடைபெறவுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரக் கூட்டத்தை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக கிண்ணியா - மூதூர் மற்றும் கிண்ணியா - தம்பலகாமம் பகுதிகளுக்கான படகு போக்குவரத்து இராணுவத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பிரதேச மக்கள் கிண்ணியாவில் நடைபெறவிருக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொது மக்கள் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதும், இராணுவத்தினர் கடுமையான முறையில் பொதுமக்களுடன் நடந்து கொள்ளத் தலைப்பட்டதால் பொதுமக்கள் தமது முயற்சியைக் கைவிட்டுள்ளனர்.

ad

ad