புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.பா. உ. செல்வம்

ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தமட்டில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லை. வெளிப்படையாகவே ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை சார்ந்து பல விடயங்களை இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் தேவையென்ற மன நிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad