புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

முத்தையன்கட்டுக்குளத்தின் இரு வான்கதவுகள் இன்று திறக்கப்படும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு
நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 
முத்தையன்கட்டு நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள 6 குளங்களில் ஏற்கனவே வான் பாய்ந்து வரும் நிலையில், முத்தையன்கட்டு குளத் தின் நீர் மட்டம் தற்போது 20 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சராசரியாக 57 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. 

இந்நிலையில் குளத்தின் நீர்மட்டம் இன்று காலைக்குள் 21 அடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் முத் தையன்கட்டு குளத்தின் 2 வான் கதவுகளையும் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்படும் போது, வான் பாயும் பிரதேசங்களான வசந்தபுரம், மல்லாககண்டல், மற்றும் கன்னுத்திரபுரம் ஆகிய இடங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை, முத்தையன் கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள தண்ணிமுறிப்பு குளத்தி லும் நீர்மட்டம் 20 அடி 9 அங்குலமாக காணப்படுகின்றது. இந்த குளத்தில் வான் கதவுகளும் திறக்க வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முத்தையன்கட்டு குளத்தின் கீழுள்ள தட்டமலை, விசுவ மடு, கணுக்கேணி, உடையார்கட்டு, மருதமடு, மடவாளசிங்கம் ஆகிய குளங்கள் ஏற்கனவே வான் பாய்;ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad