புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2014

பகல் கொள்ளையா?அவலூர் பேட்டை இந்தியன் வங்கி கிளையில் நடப்பது என்ன ?


தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது
கண்ணில் படும்வரை....
LPG GAS மானியத்தொகை பெற நமது அரசங்கம் பயனாளிகள் அனைவரையும் அவர்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியது. இதனால் அனைத்து மக்களும் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்... நான் எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க (STATE BANK OF INDIA அவலூர் பேட்டை கிளை) சென்றேன். அங்கு வங்கி ஊழியர் மற்றும் மேனேஜர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ரூ.102(நபர் 1 க்கு) வசூல் செய்தனர். ஆனால் இதற்கான receipt யாருக்கும் வழங்கப்படவில்லை இதனால் சந்தேகம் அடைந்த நான் எதற்காக இந்த பணம் வசூல் செய்கீறிர்கள் என்று கேட்டேன் அதற்கு மேனேஜர் அவர்கள் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சர்வீஸ் ஜார்ஜ் என்று கூறினார். அப்பெடியென்றால்க அதற்கான receipt தாருங்கள் என்று கேட்டேன். உடனே மேனேஜர் கீழே காணப்படும் ரசீதை கொடுத்தார. நானும் பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்..
அதிர்ச்சி தகவல்கள்....
1. ஆதார்கணக்கை வங்கிக்கணக்குடன் இணைக்க ரூ.102 (நபர் 1 க்கு) பணம் செலுத்திய யாருக்கும் பணம் பெற்றதற்கான ரசீது வழங்கப்படவில்லை...
2. இந்தியன் வங்கிகளில் இது போன்று பணம் வசூலிக்கப்படவில்லை..
3. STATE BANK OF INDIA Toll Free No 1800 425 3800 ஐ தொடர்பு கொண்டு கேட்டபோது. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க பணம் ஏதும் செலுத்தப்படவேண்டியது இல்லை என்று கூறினர்.
4. மறுபடியும் மேனேஜர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது வேண்டும் என்றால் வந்து உங்கள் பணத்தை திரும்ப வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.
என்னுடைய கேள்வி...
1. அப்படியென்றால் மக்களிடம் வாங்கிய பணம் யாருக்கு போய் சேருகின்றது?
2.ஒருவேளை அதற்கான ஜார்ஜ் இந்திய அரசாங்கத்தால் வசூலிக்கப்படுவது உண்மையெனில் (ரூ.102) இவ்வளவு தொகை எதற்கு?
3. என்னிடம் போனில் தொடர்பு கொண்டு திரும்ப பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய மேனேஜர் பணத்தை வசூல் செய்த அனைத்து மக்களிடம் போன்பண்ணி பெற்றுக்கொள்ள சொல்வாரா? அப்படி சொல்லி அனைத்து மக்களுக்கும் பணத்தை திரும்ப கொடுப்பாரா?
4. ஒரு நபருக்கு ரூ.102 வீதம் வசூலித்தால் மொத்த வசூல் பணம் இந்த கிளையில் மட்டும் எவ்வளவு?
5.வங்கி கணக்கு எண் நிரப்பாமல் தேதி, ரூபாய் மற்றும் எனது பெயர் எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்த அவசரம் என்ன?
தயவு செய்து ஷேர் செய்யவும்
நன்றி : திருவேங்கிடம் B.Sc
அவலூர் பேட்டை இந்த ஊரில் 8000 திற்கும் மேற்பட்டோர் இதே போன்று 102 ரூபாய் கொடுத்து உள்ளனர் இதற்காக நான் புகார் தெய்ரிவித பொது என்னை பேங்க் மேனேஜர் எச்சரித்தார் இபடியலாம் செய்தால் உங்கள் மீது நான் complint செய்வேன் என்று but தற்போது பணம் வாங்குவதை நிறுத்தி விட்டனர்......

C Thiru Chakkaravarthi

ad

ad