புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

பேருந்துகளை இயக்க அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தேடிய அமைச்சர்



கடலூர் மாவட்டத்தில் 3,600 போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அண்ணா தொழிற்சங்கத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்ததில் அந்த தொழிற்சங்கத்தில் மொத்தம் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 

நேற்று முதல் எதிர்க்கட்சியைச் செர்ந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 1500 பேர் இருந்தாலும், 36 பேருந்துகள் உள்ள நெய்வேலி டிப்போவில் 4 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. 58 பேருந்துகள் உள்ள வடலூர் டிப்போவில் ஒரு பஸ் கூட வெளியே போகவில்லை. 45 பேருந்துகள் உள்ள திட்டக்குடியில் 3 பேருந்துகள்தான் இயக்கப்பட்டன. 130 பேருந்துகள் உள்ள சிதம்பரத்தில் 7 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. 51 பேருந்துகள் உள்ள பண்ருட்டியில் 8 பேருந்துகள் இயக்கப்பட்டன. 127 பேருந்துகள் உள்ள விருத்தாசலம் டிப்போவில் 17 பேருந்துகள் இயக்கப்பட்டன.


142 பேருந்துகள் உள்ள கடலூர் டிப்போவில், இன்று காலை எந்த பேருந்துகளும் இயக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து அமைச்சர் எம்.சி.சம்பத் டிப்போவுக்கு நேரில் சென்று அதிகாரி கருணாநிதியை சந்தித்தார். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேருந்துகளை இயக்குமாறு கூறினார். சிறிது நேரம் அங்கும், இங்கும் தேடி அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை கண்டுபிடித்த அதிகாரி, பேருந்துகளை இயக்குமாறும், அமைச்சர் நேரடியாக வந்து கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் அவர்கள் பேருந்துகளை எடுக்க காலதாமத்தை ஏற்படுத்தினர். காத்திருந்த அமைச்சர் சட்டென கிளம்பிவிட்டார். பின்னர் மேலிடத்தில் இருந்து பிரச்சனை வரும் என்று, அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் 8 பேருந்துகளை கடலூர் பேருந்து நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. என்ன என்று கேட்டால், யாரும் பேருந்தில் ஏறவில்லை. தனியார் பேருந்தில்தான் ஏறி செல்கின்றனர். பயணிகள் ஏறினால்தான் பேருந்துகளை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

ad

ad