புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

ராஜபக்ச குடும்பம் தப்பிச் செல்வதற்காக 350 தொன் தங்கத்தை விற்றது: லங்கா ஈ நியூஸ்

Japuga_Certificatex300
Japuga இடமிருந்து கார்தீபனுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம்
ராஜபக்ச குடும்பம் பெரிய தொகையிலான தங்கத்தை ஜப்பானிய வியாபாரி
ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தேர்தலில் தோல்வியைத் தழுவினால் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்காக தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் லங்கா ஈ நியூஸ் இணையம் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது. மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக நிபந்தனையற்ற பிரச்சாரம் மேற்கொள்ளும் இணையங்களில் லங்கா ஈ நியூஸ் உம் ஒன்று.
தங்க விற்பனை தொடர்பான செய்தி வருமாறு:
நாட்டிலிருந்து ராஜபக்ச குடும்பம் திருடியுள்ள 350 தொன் தங்கத்தை ஜப்பானிய மில்லியேனேரான Keiji Matsumura என்பவருகு விற்பனை செய்துள்ளது. Japuga Holdings Private Ltd என்ற நிறுவனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அந்த வர்த்தகர் 350 தொன் தங்கத்தை வாங்கியுள்ளார். இந்த வியாபாரத்திற்கு ராஜகோபால் கார்த்தீபன் என்ற தமிழர் தரகராகச் செயற்பட்டுள்ளார். சுவிஸ் நாட்டில் வசிக்கும் கார்த்தீபனின் மூத்த சகோதரர் அவரை தனக்குச் சார்பாக தரகு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் ஊடாக 16 கொள்கலன்களில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தின் தலைவர் பந்து விக்கிரம பதிவு செய்யப்படாமல் பொருட்கள் கடத்தப்பட்டதைக் கண்டுள்ளார். ஒரு கிலோ தங்கத்திற்கான விலையாக 38000.00 அமெரிக்க டொலர்கள் ராஜபக்ச குடும்பம் பெற்றுக்கொண்டது. மொத்தப்பணமாக 13,300 பெற்றுக்கொண்டனர். HSBC வங்கிக்குத் தெரிந்தே இப்பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு ராஜபக்ச சென்றமை வழிபாட்டிற்காக அல்ல. மாறாக, பணம் மற்றும் தங்கப் பரிமாற்றத்தை கவனித்துக்கொள்வதற்காக! திருப்பதி ஐயப்பன் கோவில் சட்டவிரோதப் பணம் மற்றும் தங்கம் போன்றவற்றின் கடத்தல் உலகத்தில் பெயர்பெற்ற இடம்.’ என லங்கா ஈ நியூஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆளும்வர்க்க மாபியாக்களின் கடத்தல் மையமாகி நீண்டகாலமாக்விட்டது. குறித்த இணையத்தின் தகவலை உறுதிப்படுத்த வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனினும்  இங்கு எதுவும் சாத்தியமானதே.
மக்களிடமிருந்தும், ஆளும் வர்க்கத்தின் இரண்டாவது மட்டங்களிடமிருந்தும் அன்னியப்பட்டுப் போன ராஜபக்ச குடும்பம். தொகுதி மட்டத்தில் நம்பிக்கைக்குரிய எவரையும் கொண்டிருக்கவில்லை. தனக்கு நம்பிக்கையானவர்களே இறுதியில் காலை வாரிவிடலாம் என்ற அச்சம் பாசிஸ்டுகளிடம் நிலைகொண்டுள்ளது.
எல்லா பாசிஸ்டுக்களும் மக்களிலிருந்கு அன்னியமாகி விடுவதைப் போன்றே ராஜபக்ச குடும்பமும் களத்தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டு நாளை குறித்த அச்சத்தில் உலாவருகிறது. மறுபுறத்தில் இதுவரை ராஜபக்சவுடன் கூடிக்குலாவிய சிங்கள பௌத்த பெருந்தேசிய வியாபாரிகள் ஜனநாயகத்தை மீட்கப்போவதாக எதிரணியை ஆரம்பித்துள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள், இனப்படுகொலையில் பங்காற்றியவர்கள், ஏகாதிபத்திய அடியாட்கள் போன்ற அனைவரதும் கூட்டான எதிரணி ராஜபக்ச குடும்பம் உருவாக்கியுள்ள சுரண்டல் வெளியை நிர்வகிப்பதற்காக காத்திருக்கின்றது.
Japuga இடமிருந்து கார்தீபரண்டல் வெளியை நிர்வகிப்பதற்காககாத்திருக்கின்றது.

ad

ad