புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2014

அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்


'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவன் பாக்கியராஜ் டாருகீசன் தெரிவித்துள்ளார். 
 
 
 
நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் டாருகீசன் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 
தனது சாதனை குறித்து உதயன் இணையத்திற்கு வழங்கிய செவ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
எனது சொந்த இடம் மீசாலை தற்போது நாச்சிமார் கோயில்ப்பகுதியில் வசித்து வருகின்றோம். 
 
எனது தந்தை தென்மராட்சி முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர். நான் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலும் சாவகச்சேரி இந்து ஆரம்பப்படசாலையிலும் எனது ஆரம்பக்கல்வியை கற்றேன். 
 
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். இந்துக்கல்லூரியில் எனது கல்வியை ஆங்கிலமொழி மூலம்  தொடர்ந்தேன். 
 
க.பொ.த சாதாரண தரத்தில் 8ஏ சீ பெற்று உயர்தரத்தில் கணிதப்பிரிவைத் தேர்ந்தெடுத்து கற்று 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டேன். 
 
இதையிட்டு நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன். என்னை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கு நான் நன்றி கூறுகின்றேன். 
 
 
அத்துடன் எனக்கு வழிகாட்டியாக இருந்த கற்பித்த ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் நன்றிகளைக் கூறுகின்றேன்.
 
 
எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம் என்றார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=785063757028256962#sthash.CtcSPxIq.dpuf

ad

ad